Pookkal trust










Green Tree Environment Development (NGO). 
(Nonprofit Organisation).

     Pookal trust was founded by Mr.Sivakumar and 11 members on 03/03/2017 at kangayam. Registered number 6/BK4/2017

வணக்கம் நண்பர்களே!

     எதிர்கால இயற்கையின் குரலாக உங்களிடம் உரையாட விரும்புகிறேன்.
இயற்கை என்றால் எது? நம் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமக்கு விட்டுச் சென்ற பொன் விளையும் மண், மாசற்ற காற்று, மாசற்ற நீர் அதை நாம் இன்று என்ன செய்துள்ளோம். அனைத்தையும் விஷமாக்கி அடுத்த தலைமுறைக்கு தர தயாராக உள்ளோம். இதை அனைத்தையும் மாற்றி அடுத்த தலைமுறைக்கு தராவிட்டால் வரலாற்றில் மனிதன் தன் சுயநலத்திற்காக இயற்கை வளங்களை அழித்து ஒரு இருண்ட காலத்தை உருவாக்கிய பெருமை நம் அனைவரையும் சேரும். இதை செய்யவா பிறந்துள்ளோம், இல்லை இதை மாற்றவே பிறந்துள்ளோம்.


     இதற்காக நிகரான வழி மரம்!மரம்!. மரத்தை பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் உள்ளதா. நம் முன்னோர்கள் மரத்தை கடவுளாக நேசித்து வழிபட்டு வந்தனர். இதற்கான சான்று அனைத்துக் கோயில்களிலும் தலை விருட்சக மரம் அமைந்திருக்கும். அம்மரம் அவ்விடத்திற்கு ஏற்ப தட்பவெப்பநிலைக்கு ஏற்றதாகவும், மண் வளத்திற்கு ஏற்றதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும், நாட்டு ரக மரமாகவும், பல்லுயிர் பெருக்க வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கக் கூடிய மரத்தைப் பற்றி அறிவீர்களா?

     இதுபோன்ற பல பாரம்பரிய மிக்க அறிய வகை நாட்டு ரக விதைகள் நம்மிடம் உள்ளா?

     இவ்விதைகளைத் தான் நாம் சேமித்து வைத்துள்ளோமா? இல்லை இதற்காகத் தான் நாம் முயற்சி எடுத்துள்ளோமா?

விதை வளர மண்!

     மண் வளத்தை பாதுகாக்கின்றோமா? இயற்கை உத்தை விதைத்து மண்ணை வளர்த்தோம். பிளாஸ்டிக்கை புதைத்து மண்வளத்தை கெடுத்தோம். இதை எப்படி மீட்கப்போகிறோம்.இதை மாற்ற அமைக்கப்பட்டது தான் பூக்கள் அமைப்பு.

பூக்கள் அறக்கட்டையின் நோக்கம்!

     (1) விதைகளை சேகரித்தல்

     (2) விதைகளை பராமரித்தல்

     (3) விதைகளை நடவு செய்து வளர்த்தல்

     (4) மரம் நடுதல்

     (5) மழைநீர் சேகரிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

     (6) குளம், குட்டை பராமரித்து விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் கொடுத்தல்.


பூக்கள் அமைப்பு மலர அனைத்து நண்பர்களையும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்.

எப்படி?

     நண்பர்களாகிய நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் நாட்டு ரக விதைகளையும் அதன் பயன்களையும் அதன் சிறப்பை விளக்கம் அறிய புகைப்படங்களையும் சேர்த்து உங்கள் பூக்கள் அமைப்பிற்கு அனுப்புங்கள். நாங்கள் இவ்விதைகளை சேகரித்து வைக்கிறோம். தேவைப்படும் பட்சத்தில் உங்களுக்கு வழங்கப்படும். பணத்திற்காக விதைகள் வழங்கப்படமாட்டாது. ஒருவருக்கு ஒரு மரத்தின் விதை தேவைப்படும் பட்சத்தில் அவர் மற்றொரு விதையை கொடுத்து பெற்றுச் செல்லலாம்ப ண்டைய பண்டமாற்று முறையே செயல்படும்.

பூக்கள் அமைப்பிடம் பகிர்ந்து கொள்ளவேண்டியவை.
  • மரத்தைப் பற்றிய அறிய வகை புத்தகங்கள், புகைப்படங்கள் தகவல்கள் மற்றும் ஆவணங்கள். 
  • கோவில்களில் உள்ள தல விருட்சக மரங்கள் மற்றும் விவரங்கள், அதன் அமைபிடம், ஊர். 
  • மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய தகவல்கள். 
தங்கள் தகவல்களை எங்களுக்கு அனுப்ப வேண்டிய முகவரி.


     பூக்கள் அறக்கட்டளை,

     25, புதுவாய்க்கால் மேடு,

     திருப்பூர் ரோடு,

     காங்கயம் - 638 701,

     திருப்பூர் மாவட்டம்,

     தமிழ்நாடு.
 
Email ID: pookalkgm3@gmail.com

Blog: www.pookaltrust.blogspot.com

like & contact us at Facebook




கருத்துகள்