இச்சி மரம்



இன்பமா தூரி
கட்டி ஆடிய இத்தி மரம்
கிள்ளிய இடமெல்லாம்
பால்வடிக்கும் பசுமரம்

இலை நரம்பு புடைச்ச
மரம்
இதிகாசத்தில் வந்த மரம்
கொல்லைப்பக்கம் ஆட்டுக்கு
கொப்பு ஒடிச்சு கட்டிய மரம்

யாரோ வச்ச மரம்
ஊரே மெச்சும் மரம்
சிவந்த பழம் காய்ச்சு
செம்பூத்து பசி ஆரும் மரம்

பணிவு தெரிஞ்ச மரம்
இன்னல் செய்தாலும் வளையும் மரம்
எனக்கு தெரிஞ்ச அன்பு மரம்

மதியம் மைனா கொஞ்சும் மரம்
தூரு பக்கம் பள்ளம் தோண்டி
கோழிகுஞ்சு தூங்கும் மரம்

கட்டு வீரியன் ஏற தெரியாத
மரம்
காட்டு பூனை எச்சம் செய்யத
மரம்

சிலு சிலினு காத்து வீசும்
சீரிய விசிறி மரம்
மொட்டை வெயில் அடிச்சாலும்
முகம் கோணாம குளுமை தரும் மரம்

கொஞ்சமா இலை உதிர்த்தாலும்
கஞ்சம் இல்லாம நிழல் தரும் மரம்
களவானி வந்து பதுங்கிய
மரம்
காலைவரை அவன் இதமா உன்
மடியில் உறங்கி
அவன் கடமை மறந்த மரம்

சாமியாரு வந்து இன்னும்
தங்காத மரம்
சாமி போல வந்த பறவைக்கும்
நொந்த சிறகுக்கும் அடைக்கலம்
தந்த மரம்

தண்டு பெருத்த மரம்
தன கை ஓடித்த போதும் பொறுத்த மரம்
தலை முறை கடந்த மரம்
உனக்கு செய் முறை என்ன செய்வேன்
மரமே நீ நீடுவாழ வரமே கேட்டேன்
-செந்தூர் பாண்டியன்

எழுதியவர் : கவிஞர் செந்தூர் பாண்டியன்

கருத்துகள்