சாந்தி நிகேதன் தொடக்கப்பள்ளி, KKS நகர், குள்ளம்பாளையம்

 அனைவருக்கும் வணக்கம்

நிகழ்வு 20/10/2023. வெள்ளிக்கிழமை

இந்த உலகம் குழந்தைகளுக்கானது

பண்டைய இந்திய பழமொழி.

பூமியை நலமுடன் கவனித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் பெற்றோரால் உங்களுவழங்கப்படவில்லை, உங்கள் குழந்தைகள் உங்களுக்கு கடனாக கொடுத்துள்ளனர். நமது மூதாதையரிடம் இருந்து,  நாம் பூமியை பெறவில்லை, நமது குழந்தைகளிடம் கடன் வாங்கியுள்ளோம்.


நாம் இயற்கை அன்னை இடம் எண்ணற்ற வளங்களை பெற்று வளமுடன் வாழ்கிறோம். திருப்பித் தருவதில்லை. இயற்கை அன்னையின் வளங்கள் என்றும் குறையாமல் பார்த்துக்கொள்ளும் கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ளது.


சாந்தி நிகேதன் தொடக்கப்பள்ளி, KKS நகர், குள்ளம்பாளையம், குண்டடம் ஒன்றியம் திருப்பூர் மாவட்டம் மழலையும் மரமும் என்ற செயல் திட்டத்தின் கீழ் பூக்கள் அறக்கட்டளையில் சார்பாக இன்று1 வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்கள் 120மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இலுப்பை விதை 300 மற்றும் நர்சரிக்கவர்300 வழங்கப்பட்டது.


சரஸ்வதி பூஜை முன்னிட்டு பள்ளியில் சிறிய நர்சரி துவங்கப்பட்டது அறக்கட்டளையின் சார்பாக விதைகள் மற்றும் நர்சரி கவர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு  ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்திற்கு மற்றும் ஆசிரியர் அனைவருக்கும் அறக்கட்டளையின் சார்பாக நன்றி.


































கருத்துகள்