உதிர வேங்கை



     உதிர வேங்கை என்றொரு மரம் இருக்கிறது. இந்த மரத்தைக் கீறினால் ரத்தம் வழிகிறது. இடி, மின்னல் மற்றும் கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும், மனித ரத்தம் போல சிவப்பு நிறத்தில் பால் வடியும், பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த உதிர வேங்கை மரங்கள்.

     மஞ்சள் நிறத்தில் காணப்படும் பூக்களின் மேல், சிறுத்தை உடலில் உள்ள புள்ளிகள் போல காணப்படுகின்றன.

     உதிர வேங்கையை தாவரவியலில் 'பீரோகார்பஸ் இண்டிகஸ்(Pterocarpus indicus)’ என்பார்கள். மரத்தில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்’கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்குக் காரணம்.அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டும் அல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலிக்கும் இது அற்புதமான மருந்து.

     ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரைத் தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய மரம் இதுதான். இதில் நார்ச் சத்தும், செரிமானத் தூண்டுதலும் அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

    இது உதிரத்தை உறையவைப்பதால், மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கும் இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக வைப்பர். இதனால், தோல் நோய் வராமல் தடுக்க முடியும்.

    தற்போது இந்த மரங்கள் வனப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. நிலப்பகுதியில் அரிதாகவே காணப்படும்.

கருத்துகள்