வேம் பூஞ்சாளம் (Vesicular-arbuscular mycorrhiza (VAM)




         இந்த பூமியில் சுமார் 460 மிலிலியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வேம் பூஞ்சாளம் 95 சத தாவரங்களின் வேர்களுடன் பின்னிப்பிணைந்து ஒரு ஒட்டுறவை ஏற்படுத்தி இரண்டும் பயனடைந்திருக்கிறது என்பது stone tree fossile – படிவ ஆராய்வில் தெரியவந்துள்ளது.
.
         ஆனால் நாம் பேராசையால் செயற்கையாக உரங்களையும் பூஞ்சாள மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக தாவரத்திற்கு இட்டு இறுதியில் மண்ணிலிருந்த வேம் பூஞ்சாளத்திற்கும் தாவரத்திற்கும் பல மில்லியன்காலமாக இருந்த ஒட்டுறவை ஒரு சிறு காலகட்டமான 50 ஆண்டுகளுக்குள் அறுத்தெறிந்திருக்கிறோம் என்பதே அவமானமாக உள்ளது.
.
எல்லாம் சரி… வேம் பூஞ்சாளம் என்றால் என்ன ?
.
         இவை மனிதனுக்கு எவ்வாறு நரம்பு ஊசி போடப்படுகிறதோ அவ்வாறு தனது கொடி போன்ற மைசீலியாக்கள் மூலம் தாவர வேர்களை துளையிட்டு உள் செல்களுக்கள் சென்று தனக்கு தேவையான உணவுப்பொருளான கார்பன் மற்றும் ஒரு வகையான கார்போகைரேட் சர்க்கரையை சிறு அளவிற்கு மட்டும் தாவரத்திடம் (வேர்கள் வாயிலாக) பெற்றுக்கொள்கிறது .
.
         கைமாறாக தாவர சத்துக்களான கிட்டா நிலையிலுள்ள பாஸ்பரஸ், NH3- நைட்ரஸன் மற்றும் அனைத்து நுண்ணுாட்டங்களையும் உடனுள்ள தாவரத்திற்கு அளிப்பதோடு தாவரத்திற்கு சல்லி வேர்கள் செல்ல இயலாத இடங்களுக்கும் சென்று தண்ணீரை பயிர்களுக்கு எளிதாக பெற்று தனது எல்லையற்ற மைசீலியாக்கள் மூலம் அதே நரம்பு ஊசி செலுத்துகிறது. மேலும் தாவர வேரைச்சற்றி கோட்டை போன்ற அமைப்பை ஏற்படுத்துவதால் தீமை தரும் பூஞ்சாளங்களையும் கட்டுப்படுத்தும் செயலை செய்து வருகிறது.
.
         மேலும் வாயு கார்பன் அதிகமாவதால் புவி வெப்பமயமாதல் காரணமாக உலக அழிவு விரைவில் என்று சொல்லிக் கொண்டிரக்கும் நிலையில் தாவரங்களால் எடுத்துக்கொள்ளப்படும் 20-30 சத கார்பன் இவ்வகை பூஞ்சாளங்களால் மண்ணில்
நிரந்தரமாக புதைத்து வைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.
.
         முந்தைய காலங்களில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் சுமார் 5 வண்டி மக்கிய மாட்டு/ ஆட்டு எரு போட்டது பயிருக்கான சத்து இல்லை என்பதும் அவை இம்மாதிரியான வேம் பூஞ்சாளத்தினை பெருக்கி அதன் மூலம் கிட்டாநிலையிலுள்ள ஈரப்பதம் மற்றும் சத்துக்களை பயிருக்கு எடுத்து தந்து நல்ல மகசூல் கிடைத்ததும் பழைய நினைவுகள்.

         இயற்கையாக நடந்து கொண்டுவந்த விவசாயத்தை எல்லோரும் கைகோர்த்துக்கொண்டு தொலைத்தபின்பு யார்யாரையோ குற்றம்சாட்டி கைகாட்டி கொண்டிருக்கிறார்களோ தவிர உணமையான பண்டைய பாதைக்கு இன்னும் திரும்பவே இல்லை.
.
         இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்று சொல்லும் பலரும் இந்த செலவில்லாத நுட்பத்தை கடைபிடிக்க முற்படுவதாகவே வயல்வெளிகளில் காணோம்.
.
         தாவரத்தின் வேர் மற்றும் இவ்வகை பூஞ்சாளங்களின் ஒட்டுறவான செயல்களால் அதிக தாவர வேர்கள் உருவாகி பயிர் மகசூலையே அடுத்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதுதான் நிதர்சனம்.

கருத்துகள்