நீர்



     300 அடி மரங்கள் இருந்த நீலகிரி மலையில் மரங்களை வெட்டி, மூன்று அடி உயரத் தேயிலைத் தோட்டங்களை அமைத்துவிட்டோம். மேகங்களைத் தடுத்து மழையும் வெயிலுக்கும் நிழலும் தந்தன காடுகள். தோட்டங்களில் விளைகிற காபி, பயிரிடத் தேவையான தண்ணீரில் ஐந்தில் ஒரு மடங்கு தண்ணீர் இருந்தால் போதும், சத்துமிக்க தானியங்களை நம்மால் பயிரிட முடியும். ஆனால் ஒரு டம்ளர் தேநீருக்காக, பத்து மடங்கு தண்ணீரைச் செலவழிக்கிறோம். தமிழன் காபி குடிக்காமல் இருந்ததற்கு காரணம் அவன் தட்பவெப்ப சூழலுக்குரிய பயிர் காபி இல்லை என்பதுதான்.

     இப்புவி மூன்று பங்கு நீரும், ஒரு பங்கு நிலத்தாலும் ஆனது. உலகம் மூன்று பங்கு நீர்ப்பரப்பாக இருந்தாலும் நாம் பயன்படுத்த உகந்த நீராக இல்லை. இந்த ஒரு பங்கு நிலத்திலும் எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்த ஊரணிகள், ஏரிகள், ஆறுகள் என எங்கும் கொஞ்சித் தழுவிய நீர்வீழ்ச்சிகள் பழைய காலத்தில்தான் இருந்தன. ஆனால் இப்பொழுது நீர் ஊற்றுக்கள் நூற்றுக்கணக்கான அடி ஆழத்தின்கீழ் சென்றுவிட்டது.



இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மனிதனின் எண்ணமும், சிந்தனையும், அன்பும் இப்படித்தான் தேடிப்பார்க்கும் ஒரு அரியவகை பண்பாக மாறிவிட்டது. நீரைத் தேடி அலைவதுபோல் பண்புகளைத் தேடி அலைகிறோம்.

கருத்துகள்