கருங்காலி மரம்





     கருங்காலி அல்லது இலங்கைக் கருங்காலி எனப்படும் மரம் மிகவும் உறுதியான மரம் . டியோஸ்பைரோஸ் எபேனம் (Diospyros ebenum) என்னும் தாவரவியல் பெயர் கொண்டது இந்த கருங்காலி மரம்.
     
     இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. இவை மிகவும் பெறுமதிமிக்க பலகை வகையாகும். இப்பலகை கருப்பு நிறம் கொண்டவை. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர்

பரவல் :
     பொதுவாக கருங்காலி மரம் இந்தியா முழுவதிலும், மியான்மர், மலேசியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் அதிகம் காணப்படுகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் வடமத்திய மாகணத்திலும் தென்மாகாணத்தின் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கருங்காலி மரங்கள் காணப்படுகின்றன.

மருத்துவப் பயன்கள் :
     இதன் பட்டை, பிசின், வேர் அதிக மருத்துவப் பயன் கொண்டவை. துவர்ப்புத் தன்மை மிக்கது. நீரிழிவு நோய், பெருவயிறு, வயிற்றுப்புழு நோய் குருதிக்குறைவால் உருவாகும் வாதம், பெருநோய், அழல் குன்மம் போன்றவை நீங்கும்.

கருங்காலி கஷாயம்:
     கருங்காலிக் கட்டை - 100 கிராம், பனை வெல்லம் - 50 கிராம், சுக்கு, மிளகு - தலா 10 கிராம், ஏலக்காய் - 10. கருங்காலிக் கட்டையைத் தூள் செய்துகொள்ளவும். சுக்கு, மிளகு, ஏலக்காயை ஒன்று இரண்டாகத் தட்டிக்கொள்ளவும். பனை வெல்லம் தவிர மற்ற அனைத்தையும் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அரை லிட்டராகச் சுண்டும்படி காய்ச்சவும். அதை வடிகட்டி, பனை வெல்லம் சேர்த்து மறுபடியும் சிறிது நேரம் காய்ச்சிக் குடிக்கவும்.

     இந்தக் கஷாயத்தைத் தொடர்ந்து குடித்துவர சர்க்கரை நோய் வருவதைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள மாவுச்சத்தை சரியான அளவில் வைத்திருக்கும் தன்மைகொண்டது. உடல் உறுதி பெறும். உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி உண்டாக்கும். இரும்புச் சத்து இருப்பதால், ரத்த விருத்தியை அதிகப்படுத்தும். இளமையிலேயே முதுமைத் தோற்றம் உண்டாவதைத் தடுக்கும்.

கருங்காலி வேர்:
     கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.

     நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும்.
வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கருங்காலி மரப்பட்டை:
     கருங்காலி மரப்பட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும்.

     பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது. வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும்.

     இதுபோல் கருங்காலிப்பட்டை, வேப்பம் பட்டை, நாவல்பட்டை இம்மூன்றையும் சம அளவு எடுத்து இடித்து நாள்பட்ட புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் ஆறும்.

கருங்காலி பிசின்:
     கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும்.

தாகமுக்தி:
     `தாகமுக்தி' என்ற பொடியை, கேரளாவில் கடைகளில் விற்பனை செய்கிறார்கள். சுக்கு, மிளகு, ஏலம், நன்னாரி, கருங்காலி போன்ற பல வகையான மூலிகைகள் கலந்த பொடி அது. கேரளாவில் சுடுநீரில் இந்தத் தாகமுக்திப் பொடியைச் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். ஹோட்டல்கள் முதல் வீடுகள் வரை நிச்சயம் தாகமுக்திப் பொடி கலந்த தண்ணீரைத்தான் குடிக்கிறார்கள். இதன் மூலம் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பயன்கள்:
     கருங்காலி மரத்தில் இருந்தே "உலக்கை" செய்யப்படுகிறது.

     இயற்கை சாயம் செய்யப் பயன்படுகிறது. அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் பழ நூற்றாண்டுகளை கடந்தும் நிலைக்கிறது என்றால் அது தான் நமது சிறப்பு.

     பலவகையான கலைப்பொருட்கள், மரப்பாச்சி பொம்மைகள், கட்டில், நாற்காலி போன்றவைகள் கருங்காலி மரத்திலிருந்து செய்யப்படுகிறது.

     இந்த கருங்காலி மரத்துலதான் கோடாரி செய்வாங்க. இந்த கோடாரியை வைச்சுத்தான் கருங்காலி மரத்தை வெட்டுவாங்க. தன்னோட இன மரத்தை தானே அழிக்க, கருங்காலி மரம் உதவுது. அதனாலத்தான் கெடுதல் வேலை செய்யறவங்களுக்கு ‘கருங்காலி’னு பேரு வைச்சிருக்காங்க

கருத்துகள்

  1. இந்தியா இலங்கை கருங்காலி மரம் படம் பதிவிடுங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக