கோயில் காடுகள்


     தமிழகத்தில் மலைக்காடுகள் மட்டுமல்ல. கோயில் காடுகளும் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் அந்த இடத்துக்கே உரித்தான தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட சிறிய வனப் பகுதியே கோயில் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

     ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் தங்கள் மூதாதையர்கள் தங்கள் கிராமத்தை பாதுகாப்பார்கள் நம்பிக்கையில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவில்காடுகள் அந்தந்த கிராமத்தில் கிராம காவல்காக்கும் தெய்வங்கள் வசிக்கவென்று மனிதர் தொடாமல் விடப்பட்டிருக்கும் பகுதி.

     இவற்றின் பரப்பளவு மூன்று சதுரக் கிலோமீட்டர் முதல் 200 சதுரக் கிலோமீட்டர் வரை. இதற்கான ஆதாரங்கள் இன்றைக்கும் அரசு ஆவணக் கோப்புகளில் இருக்கின்றன.

     வேப்பமரம், நாகலிங்க மரம், வில்வமரம், அரச மரம், போன்ற மரங்கள் ஏரளாமான உதவிகளை மனிதனுக்கு செய்தால் இவை பாதுக்கப்பட வேணடும். கிராமத்தில் ஒரு ஏக்கரா நிலமாவது இந்த கோவில்காடுக்காக ஒதுக்கப்பட்டு அதில் அம்மன் சிலைகளும் அய்யனார்,மதுவீரன் சிலைகளும் வைக்கப்பட்டு அங்கு மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் மற்ற விலங்குகள் சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மீண்டும் அதே பரப்பளவுக்கு கோயில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காட்டிலும் அதிக அளவுக்கு வெப்பத்தைக் குறைப்பதிலும், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதிலும் கோயில் காடுகள்தான் அதிகப் பங்காற்றுகின்றன.

கருத்துகள்