தேன் பழம்


தேன் பழம் (Muntingia calabura) என்பது முன்டிங்கியா இன பூக்கும் தாவரம் ஆகும். 

இது Singapore cherry (சிங்கப்பூர் செர்ரி), Jamaican cherry, Panama berry, Bajelly tree, Strawberry tree என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது 

இதன் தாயகம் தென் மெக்சிக்கோ. கரீபியன், மத்திய அமெரிக்கா, மேற்கு தென் அமெரிக்கா, பெரு, பொலிவியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன. 

இது 7-12 மீட்டர் உயரமுடைய கிளைகளைக் கொண்ட சிறிய மரம். இதன் பூ சிறியதாகவும் வெள்ளை நிறத்துடன் காணப்படும். இது சிவப்பு, இள மஞ்சள் பழங்களை விளைவிக்கின்றது. 

இதன் பழங்கள் உண்ணத்தக்கதும், இனிப்பான சாற்றைக் கொண்டுள்ளது. இதனுள் மிகச்சிறிய மஞ்சள் நிற விதைகள் அதிகமாகக் காணப்படும்!! 

சிங்கப்பூர் செர்ரி பழத்தைத் சாப்பிட, வௌவால் மற்றும் விதவிதமான பறவைங்க தோட்டத்துக்கு வரும். அந்தப் பறவைங்களோட எச்சம் மூலமா, சந்தனம் மாதிரியான அரிய வகை செடிங்க தோட்டத்துல வளரும்! 

சிங்கப்பூர் செர்ரி செடியை, பழத்தோட்டத்துல நட்டா, அணிலு, குரங்குங்க முதல்ல இந்தப் பழத்தைத்தான் சாப்பிடும். இதனால, தோட்டத்துல இருக்கற பழங்களுக்கு அதிக சேதம் வராது. 

மரம் விறகாகவும் கிராப்புறத்தில் சிறிய கட்டட வேலை செய்யவும் பயன்படுகிறது! நார்சத்து உள்ளதால் தண்டு கயிர் திரிக்க பயன்படுகிறது. 

மரங்களை அலங்காரத்திற்கு வளர்க்கலாம். பழங்களை அப்படியே சாப்பிடலாம். பழங்களை ஜாம் செய்தும் சாப்பிடலாம். இலைகளை கொண்டு தேனீர் தயாரித்து குடிக்கலாம். இது தலைவலிக்கும் குடற்புண்ணிற்கு மருந்தாகவும் பயன்படுகிறது பழங்கள் மூச்சு கோளாறுகளை சரிசெய்யும் . 

இந்த மரம் அறுபது வகையான பறவைகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது . 

விதைகள் மற்றும் தண்டுகள் மூலமாக இதை பெருக்கம் செய்யலாம். வேகமாக வளரும் இயல்பு கொண்டவை இந்த மரங்கள். வறண்ட நிலங்களிலும் வளரும் தன்மை உடையது.

கருத்துகள்