காடுகள்

காடுகள்

இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 22.8 % காடுகளே! தற்போதைய நிலவரப்படி சுமார் 3,775 சதுர கிலோ மீட்டர்கள்! சில வருடங்களுக்கு முன்புசுமார் 1,309 சதுர கி.மீ. பரப்பளவு அதிகமாகியிருக்கிறது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் இரண்டு சதவிகிதம். இயற்கையான, ஆரோக்கியமான உயிர் வாழ்க்கைக்கு வனங்கள் மிக அவசியம். மேலும் நீர் வளம் பெருகவும், சூழல் பாதுகாப்புக்கும் வனங்கள் மிக முக்கியம்! கதைகள் மூலமும், கவிதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் இயற்கையை நேசிக்கும் வல்லுனர்கள் வனங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்தியக் காடுகள் வெப்பப்பகுதி, மித வெப்பப்பகுதி, சமவெப்பப் பகுதி, ஆல்ப்பைன் பகுதி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. 
கிடைக்கும் மழைப்பொழிவு, மண்ணின் தன்மை, பொதுத் தோற்றம், உயிரிகள் போன்றவற்றின் அடிப்படையில் ஆறு விரிந்த பகுதிகளாக பதிமூன்று முக்கிய இனக்காடுகள் இந்தியாவில் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். 

வெப்பப் பகுதி ஈரக் காடுகள்: (TROPICAL WET FORESTS)
இப்பிரிவின் கீழ் குறிப்பிடும் நான்கு வகைக் காடுகள் இடம் பெறுகின்றன. அவை....

* பசுமை மாறாக் காடுகள் (மழைக் காடுகள்)
மேற்குப் பகுதியின் மேற்கு மலைத் தொடர்கள், கர்நாடகத்தின் வடக்குப் பகுதி, குடகு, ஆனை மலைக் குன்றுகள், மைசூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அசாமின் பிரம்மபுத்திரா நதிக்கரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இங்கு வருடம் 250 செ.மீ. க்கும் அதிக மழை பெய்யும்! சராசரி 27 டிகிரி செல்ஷியஸ் கால நிலையில் இருக்கும். இங்கே 50-60 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் பெரும்பான்மையாக உள்ளன. முக்கியமாக பரந்த இலைத் தாவரங்கள் வளரும் இந்தப் பகுதியில் நீண்ட நாள் வாழும் எபிபைடெஸ் (EPIPHYTES), மற்றும் பல காட்டுக் கொடிகளும் நிறையவே காணப்படுகின்றன. புதர்கள் பொதுவாக உலர்ந்தவை. பெரிய மரங்களின் அடிப்பாகம் பரந்து தாங்கலாக அமைந்திருக்கும். 

* பகுதி பசுமை மாறாக் காடுகள்: (SEMI EVERGREEN FORESTS) 
மேற்கு மலைத்தொடர், அசாமின் சில பகுதிகள், வங்காளம், பீகார், ஒரிசா, அந்தமான் தீவுகள் என்ற இடங்களில் காணப்படுகின்றன. 
வருடம் 200-250 செ.மீ. மழையும், 26 டிகிரி செல்ஷியஸ் சராசரி உஷ்ணமும் உள்ள பகுதிகளில் இவ்வனங்கள் காணப்படும்.
இத்தகைய வனங்கள் என்றும் பசுமையுள்ள காடுகளுக்கும் இலையுதிர் காடுகளுக்கும் இடைப்பட்ட தன்மை கொண்டவை. 20 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரும் மரங்கள் ஏராளமாய் இருக்கும். பனி விழத்தொடங்கும்போது இலைகளை உதிர்த்துவிடும். இவ்வாறு நேரும் இடங்கள் வழியே சூரிய ஒளி காட்டினுள்ளே நுழைவதால் மரங்களின் அடிப்பகுதிகளில் புதர்களி மண்டுகின்றன. 

* இலை உதிர் ஈரக்காடுகள்: (MOIST DECIDUOUS FORESTS) 
ஒன்றிரண்டு மாதங்கள் தொடரும் வறட்சியில் , சராசரி 150 - 200 செ.மீ. மழையும் கொண்ட பிரதேசங்களான மேற்கு மலைத் தொடரின் கிழக்கு பாகங்களில் "இலை உதிர் ஈரக்காடுகள்' காணப்படுகின்றன, மேலும் சோட்டா நாக்பூர், காசிக் குன்றுகள், அந்தமானின் வறண்ட பகுதிகள், இமாலயத்தின் அடிவாரத்தின் சில பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. மேல் தட்டிலுள்ள பெரிய மரங்கள் வருடத்தின் பெரும்பகுதியும் இலைகள் இன்றி காணப்படுகின்றன. கீழ் மட்டத்தில் செடிகள் வளர்வதன் காரணமாக காடுகள் பொதுவாக பசுமையாகக் காணப்படுகின்றன. 

* கரையோர சதுப்புக்காடுகள்:(LITTORAL 
SWAMP FORESTS) 
கடல், காயல், நதி, ஓடை போன்றவற்றின் கரைகளில் காணப்படும் காடுகள் (உதாரணமாக- மாங்குரோவ் காடுகள், காற்றாடிக் காடுகள்)

* வெப்பப் பகுதியின் வறண்ட காடுகள்: (TROPICAL DRY FORESTS)

* வறண்ட இலையுதிர்க் காடுகள்: (DRY DECIDUOUS FORESTS)
75 - 125 செ.மீ. மழையும், ஆறு மாதம் வறட்சியும் கொண்ட பிரதேசங்களில் தோன்றுபவை. 10 - 25 மீட்டர் உயரம் வளரும் மேல்தட்டு மரங்கள் வருடத்தில் 2 - 4 மாதம் இலைகள் உதிர்க்கும். அதனால் மேல் பகுதி திறந்தும் சமமில்லாமலும் காணப்படும். சிறிய செடிகளும் தாவரங்களும் ஏராளமாக வளரும். இப்பகுதியில் படரும் கொடிகள் குறைவாகக் காணப்படும். இந்திய துணைக் கண்டத்தில் நாற்பது சதவிகிதமும் இத்தகை வனங்களே உள்ளன. இமய மலையின் அடிவாரம் முதல் தென்முனை வரை (மேற்குத் தொடர்ச்சி தவிர) பரந்து காணப்படும் இவை ராஜஸ்தான், காஷ்மீர், வங்காளம், கேரளம், தமிழ்நாடு, ஒடிசா என்ற இடங்களிலும் அமைந்துள்ளது. 

* முட்காடுகள்! (THORN FORESTS)
மிகக் குறைந்த அளவு (25 - 75 செ.மீ.) மழை பெய்யும். பாறைகள் நிறைந்த, முள் செடிகள் அதிகமுள்ள காடுகள் இவை. (உதாரணமாக - யுபோர்பியா, அக்கேஷியா போன்றவற்றின் இனங்கள்) 
அபூர்வமாக காணப்படும் மரங்கள் உயரம் குன்றி இருக்கும். சிறு செடிகள் மிகுந்த இப்பகுதியில் மழைக் காலத்தின் புற்களும், குட்டைச் செடிகளும் வளரும். பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் சில பகுதிகள், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு போன்ற இடங்களில் முட்காடுகள் காணப்படுகின்றன. 

* மித வெப்ப மலைக்காடுகள்:(MONTANE SUB TROPICAL 
FORESTS) 
உஷ்ணப்பகுதி, மித காலநிலைப்பகுதி வனங்களுக்கு இடையே இடம்பெற்றுள்ள இத்தகைய காடுகளில் இவை இரண்டிலும் காணப்படுகின்றன. தாவர இனங்கள் இடையே கலந்து காணப்படும் மரங்கள் பொதுவாக உயரம் குறைந்தும், அடிப்பாகம் வடிவம் குறைந்தும் இருக்கும். நிறைய தாவரங்கள் வளர்கிற இத்தகைய காடுகள் உயரம் குறைந்த மலைகளிலும் அடிவாரங்களிலும் 700 - 1700 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. 
இப்பகுதியில் மூன்று வகைக் காடுகள் காணப்படுகின்றன. அவை

* பரந்த இலைக்காடுகள்
நீலகிரி மலைகள், பழனிமலை, மகாபலேஸ்வர், ராஜஸ்தானின் மவுண்ட் அபு, வங்காளத்தில் கலிம் பேக், டார்ஜிலிங், திரிபுரா, மணிப்பூர், அஸ்ஸôம் பகுதிகளில் காணப்படுகின்றன. 

* பைன் மரக்காடுகள்
பைன் மரத்தின் பல்வேறு வகைகள் வளரும் காடுகள் இவை. இமயத்தின் அடிவாரங்களிலும், காசி, நாகாலாந்து, மணிப்பூர் மலைப்பகுதிகளிலும், பெருமளவில் காணப்படுகின்றன. 

* வறண்ட பசுமைக் காடுகள்
நீண்ட வறட்சியும், பனி உறையும் குளிரும் கொண்ட ஹரியானா, ஹிமாசலப்பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபின் சிவாலிக் மலைத்தொடர் ஆகிய இடங்களில் காணப்படும்.

* மித காலநிலை மலைக்காடுகள்:(MONTANE TEMPERATE FORESTS)
மலைப்பகுதிகளில் 1700 மீ. உயரத்தில் இதமான உஷ்ணப் பகுதியில் காணப்படும். பெய்யும் மழையின் நிலையைப் பொறுத்து இவை மூன்று இனங்களாகப் பிரிக்கப் படுகின்றன. 

* ஈரமுள்ள காடுகள்: (MONTANE WET TEMPERATE FORESTS) 
மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் நீண்ட நாள் வாழும் தாவரங்கள் மிகுந்த என்றும் பசுமை கொண்ட காடுகள் உருக்கொள்கின்றன! 

* ஈரமுள்ள இமாலயக் காடுகள்:(HIMALAYAN MOIST FORESTS)
மேற்கு - மத்திய இமாசலப் பிரதேசங்களில் 1500 - 3000 மீ. உயரத்தில் வளர்கின்றன. ஓக் மரங்களும், பைன் மரங்களும் தனியாகவோ, செறிந்தோ காணப்படுகின்றன. 

* வறண்ட இமாலயக் காடுகள்:(HIMALAYAN 
DRY TEMPERATE FORESTS)
இமாலயத்தின் செங்குத்தான சரிவுகளிலும், பாறைகளும், கிரானைட் கற்களும் குவிந்துள்ள இடங்களில் காணப்படுகின்றன. சிறிய பெரிய தாவர இனங்களும் இடையிடையே கலந்து காணப்படும். 100 செ.மீ. குறைவாக மழை பெய்யும் பிரதேசங்களிலும் காணப்படும். இவை திறந்தவெளியில் அமைந்திருக்கும். 

* சப் ஆல்பைன் காடுகள்: (SUB ALPINE FORESTS)
இமாலயன் சரிவுகளில் 2800 - 3000 மீ. உயரத்திற்கு மேல் இத்தகைய வனங்கள் காணப்படுகின்றன. வருடத்திற்கு 65 செ.மீ. க்குக் குறைந்த மழையும், வாரக்கணக்கில் குளிர்ந்த காற்றும் உள்ள இடத்தில் பனி உருகி வரும் நீரை மட்டும் எதிர் நோக்கி வளரும் மரங்களைப் பார்க்கலாம்! பல்வேறு வகைப் பாசிகளும் இந்த மரங்களில் காணப்படுகிறது. 

* ஆல்பைன் காடுகள்: (ALPINE FORESTS)
சப் ஆன்பைன் பகுதிகளில் நிலங்கள் சற்று கடினமாக உள்ள இப்பகுதியில் மழையே இல்லை என்று கூறலாம். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே காணப்படும். செடிகள் மிகக் குட்டையாக தரையின் மேல் படர்ந்து காணப்படும். இது இரண்டு வகைப்படும். 
H ஆல்பைன் பகுதிகளில் ஈரமுள்ள இடங்களில் காணப்படும் உயரம் குறைந்த குத்துச் செடிகள் இங்கே வளர்கின்றன.
H வறண்ட ஆல்பைன் புதர்கள் சில பகுதிகளில் காணப்படுகின்றன. 

சில தகவல்கள்!
மலைக்காடுகள்!
பூமத்திய ரேகையில் இருபுறமிருக்கும் இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் மழை நன்கு பெய்யும் இடங்களில் ஆயிரக் கணக்கான வருடங்களாக வளர்ந்து அடர்ந்து செழித்திருக்கும் முதுபெரும் கானகங்கள்! இங்குள்ள நெடிதுயர்ந்திருக்கும் மரங்கள் இலைகளை உதிர்ப்பதில்லை. கதிரவன் ஒளி படாததால் இருள் கவிந்திருக்கும் இக்காடுகள் மூன்றடுக்கு மாடி வீடுபோல் காணப்படுகின்றன. 
உச்சாணிக் கிளைகளிலும், மத்தியிலுள்ள கொடிகளிலும், கிளைகளிலும், கீழே உள்ள புதர்களிலும், தரையிலும் வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. 
"சோலை மந்தி' (சிங்கவால் குரங்கு) மரத்தின் உச்சியிலேயே இருக்கும்! புதர்களில் காட்டுக்கோழி வசிக்கும்! கருநாகம் போன்ற ஊர்வன தரையில் நடமாடும். பறவைகள், பாலூட்டிகள், பூச்சிகள், புழுக்கள், நீரிலும், நிலத்திலும் வாழ்பவை, போன்ற பல்வேறு உயிரினங்களுக்கு சொர்க்கம் என்பது இம்மழைக்காடுகள்தாம்!

மாங்குரோவ் காடுகள்! (அலையாத்திக் காடுகள்)
சுனாமியின் பாதிப்பு பற்றி நாம் சில வருடங்களுக்கு முன்பு அறிந்தோம்! அத்தகைய பேராபத்திலிருந்து நம்மைக் காக்கும் காடுகள் இவை! இவை பெரும்பாலும் கடற்கரையை ஒட்டியிருக்கும். இந்த அலையாத்தி மரங்களின் வேர்கள் பூமியிலிருந்து ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு தரைக்கு மேலேயும் காணப்படும். இவ்வகை மரங்கள் கடல் அலைகளின் சீற்றத்தை ஆற்றி சமநிலைக்குக் கொண்டு வருகின்றன. எவ்வளவு பொருத்தமான பெயர்! அதனால் கடலோரஙகளில் குடியிருக்கும் உயிரினங்கள் மற்றும் பயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. கடல் சீற்றத்த்தை எதிர்கொள்ளும் இவ்வகை மரங்கள் இறைவனின் வரம் எனலாம்! இவ்வகைக்காடுகள் குறைந்ததாலேயே சுனாமியின் தாக்குதல் தீவிரமானதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போது இக்காடுகளின் அவசியத்தை உணர்ந்து விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. 
தமிழ்நாட்டில் கோடியக்கரை, பிச்சாவரம் போன்ற பகுதிகளில் இக்காடுகள் இருக்கின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இக்காடுகள் நிறைந்திருக்கின்றன. ஒடிசாவின் கோதாவரி டெல்டா, பிதார் கனிகா, மகாநதி டெல்டா பகுதிகள், மேற்கு வங்கத்தின் "சுந்தரவனம்', குஜராத்தின் கட்ச் வளைகுடா, மகாராஷ்டிரத்தின் "அச்ரா' , ஆந்திரப் பிரதேசத்தில் கிருஷ்ணா கழிமுகம், "லோரிங்

கருத்துகள்