மூங்கில் மரம்


ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும்
இறைவனின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மேலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயு அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் மரங்கள். மழையை வருவிக்கும் கருவிகளாக மரங்களும், செடிகளும் உள்ளன.
                                                     
சுற்றுச்சூழலை பாதுகாக்க விரும்புவோர்கள் வீட்டில் மரம் நட விரும்புவார்கள்.ஆனால்,என்ன மரம் நடுவது என்பது குறித்து பல்வேறு யோசனைகள் இருக்கும்...!!!ஏன் நம் வீடுகளில் ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் புங்க மரத்தை நடக்கூடாது......???!!!

தமிழகத்தின் வறட்சி மாவட்டங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளரும் மர வகைகள் இவை இரண்டுமாகும்... 

ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இரண்டு மூங்கில் மரங்களை வளர்த்தால் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்கின்றனர் உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள்.      

ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம். ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு வ

மூங்கில்

மூங்கில் (Bamboo) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.[3] மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.[4]ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா,நேபாளம்,பங்களாதேசு, கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.

இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒரிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிராமாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை. மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும்.

மூங்கில் வளர்ப்பு...

மூங்கில் புல் வகையை சேர்ந்த தாவரம். வெப்ப மண்டலத்தில் நன்கு வறட்சியை தாங்கி வளரும் இயல்பு உடையது.

மூங்கிலில் பல வகைகள் உள்ளன. அதிகமாய் வளர்ப்பது முள் இல்லாத மூங்கில் மற்றும் போல் மூங்கில்.
ஆடி பட்டத்தில் நடவு செய்வது சிறப்பு. ஏனெனில் ஆடியில் அவ்வப்போது பெய்யும் மழையால் நன்கு வேர் பிடித்து கோடை காலம் வருவதற்குள் வறட்சி தாங்கும் அளவிற்க்கு வளர்ந்து விடும்.

மூங்கில் நடவு செய்யும் பொழுது செடிக்கு செடி மற்றும் வரிசைக்கு வரிசை இடைவெளி 25 அடி இருக்குமாறு நட வேண்டும்.

கண்டிப்பாக ஒவ்வொரு விவசாயியும் தன் வயல் ஓரங்களில் வளர்க்க வேண்டிய மரம்.  மூங்கில் மற்ற பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும், அதனால் விளைபயிர்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்தில் மூங்கிலை வளர்க்க வேண்டும்.

முள் இல்லாத மூங்கில்:
முள் இல்லாத மூங்கில் அதிக உயரம் வளர்வது இல்லை. ஆனால் இதன் பயன்பாடு அதிகம். இந்த வகை மூங்கில் குச்சியின் நடுவில் இடைவெளிெ  இருக்காது. இதனால் விவசாய கருவிகளான கத்தி மற்றும் மண்வெட்டி போன்றவற்றின் கைப்பிடிகள் செய்வதற்கு உகந்தது. கூரை வீடுகள் கட்டுவதற்கும் பயன்படுகிறது. பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்ய பந்தல் அமைக்க இந்த முள் இல்லாத கெட்டி மூங்கில் அதிகம் பயன்படுத்த படுகிறது. குறைந்தது மூன்று வருடம் நிலைத்து நிற்க கூடியது. இதனால் விவசாயிகளுக்கு செலவில்லாத ஒரு பந்தல் அமைகிறது.

நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள்:
அடுத்து நடுப்பகுதியில் போல் உள்ள மூங்கில்கள் அதாவது நடுப்பகுதியில் இடைவெளி உள்ள முங்கில்கள் வீடு கட்டவும் கூடைகள் பின்னுவதற்கும்  பயன் படுத்த படுகின்றன.
நட்ட ஐந்தாம் வருடத்தில் இருந்து வெட்டி விற்பனை செய்யலாம். மூங்கில் தொடர்ந்து அறுபது வருடங்கள் வரை உயிர் வாழும். மானாவரி நிலத்தில் மூங்கில் பயிரிட்டால், பயிரிட்ட ஐந்தாம் ஆண்டு முதல் தொடர்ந்து  அறுபது வருடங்கள் வருமானம் பெறலாம்.

நன்கு முற்றிய மூங்கில்களில் இருந்து மூங்கில் அரிசி எடுக்கப்படுகிறது. இந்த அரிசியானது மிகவும் சத்து உடையது. அதிக சுவையாக இருக்கும். சாதாரண அரிசி போன்று சமைத்து உண்ணலாம். அடுத்து மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது . உரத்தின் தரமானது மற்ற தழைகள் மூலம் தயாரிப்பததை விட தரமானதாக இருக்கும். உயர் தர காகிதம் தயாரிக்க மற்றும்  ரூபாய் நோட்டு தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஆளுக்கொரு மூங்கில் மரம் அல்லது குறைந்தபட்சம் வீட்டிற்கு ஒரு மூங்கில் மரம் இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும்!எனவே, மூங்கில் வளர்த்து சுற்றுச் சூழலை பாதுகாப்போம்

 

கருத்துகள்