சோலை காடுகள்


*சோலை காடுகள்*
சோலை காடுகளின் அழிவுதான் கடந்த பத்தாண்டுகளின் தென்னிந்திய  வற்றாத ஜீவ நதிகளின் வறட்சிக்கு முக்கிய காரணம், என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 22 ஆயிரம் ஹேக்டேர் சோலைக்காடுகள் (Shola Forests) இருந்தன இந்த காடுகள் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மலையிடுக்குகளில் மட்டுமே காணபடுகின்றன.  தற்போது எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்ட இந்த காடுகள் இப்போது சில இடங்களிலே மட்டுமே காணபடுகின்றன.

சமவெளிப் பகுதிகளைவிட மலை உச்சிகளில் மழைப் பொழிவு பல மடங்கு அதிகமபொழியும் என்பது அனைவரும் அறிந்ததே. மழைப் பொழிவின்போது மலை உச்சிகளில் இருந்து கட்டற்றுப் பாயும் வெள்ளப் பெருக்கில் இருந்து, சமவெளிகளைக் காக்கும் அரண்கள் புல்வெளிக் காடுகளே.
புல்வெளிக் காடுகளில் மண்ணுடன் இயைந்த வேர்ப் பகுதிகள் மழைப் பொழிவின் போது மொத்த நீரையும்  அடிவாரத்தை நோக்கி வழிந்தோட விடாமல் சேகரித்து வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை .
அங்குச் தங்கும்  நீர்  புள்வெளிகளின் மூலம் தடுக்கப்பட்டு, படிப்படியாக அதன் வேர்கள் வழியே கீழே கசிந்து இடையிடையே இருக்கும் அடர்ந்த சோலைக் காடுகளுக்குத் தண்ணீரை அளிப்பது இந்த புல்வெளிகாடுகளே.

சோலைக் காடுகளுக்கு மட்டுமே உரித்தான செடி, கொடி, மரங்களின் வேர்ப் பகுதிகள்,கடற்பஞ்சு (sponge) போன்ற அமைப்பு கொண்டவை, புள்வெளிகாடுகள் அளிக்கும் நீரை உறிஞ்சி சோலை காடுகள்,நன்கு வளரும், அதன்  தேவைக்குப் போக மீதி நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடும் அந்த  தூய்மையான  நீர் தான்,பின்னர்  ஆயிரக்கணக்கான சிற்றோடைகளாகவும் அருவிகளாகவும் மலையிடுக்குகளில் இருந்து வழிந்தோடி ஆறுகளாக உருப்பெறு கின்றன.

நமது வாழ்வாதாரங்களான காவிரி, பவானி, பாலாறு, நொய்யல், கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி என எல்லாத் தென்னிந்திய நதிகளும் இப்படித்தான் உருவாகின்றன.
சோலைக் காடுகளின் அழிவுதான், நமது ஆறுகளின் வறட்சிக்கி காரணம்.
எல்லா ஆறுகளும் மலையில் உள்ள சோலை காடுகளிலில் தான் உற்பத்தியாகும். தமிழ்நாட்டில் மழை நாட்கள் என்பது 35 முதல் 50 நாடகள் மட்டுமே.900 மில்லி மீட்டர். குறைவான அளவு பெய்த மழையை எப்படி சேமிப்பது?
அதை தான் சோலை காடுகள் செய்கிறது. ஒருமுறை பெய்யும் மழையை 3 மாதம் வரை நீரை சேமித்து வைத்து  தருகின்றன. காடுகளை கணக்கில்லாமல் அழித்து நமது நீர் ஆதாரங்களை சீரழித்துவிட்டோம். சோலைகாடுகளை அழித்தன் விளைவு சுமார் 3000 ஓடைகள் வற்றிவிட்டன என்கிறது ஆய்வு. 
அது மட்டுமல்லாமல் மர ஏற்றுமதிக்காகவும் காடுகளை அழிக்க படுகின்றன. புல்வெளி காடுகளும் அழிந்தது. சோலை காடுகளும் அழிந்தது.

கருத்துகள்