நாற்று வளர்த்து மாணவர்கள் அசத்தல்



அன்னுார்:

    ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளியில் நாற்று வளர்த்து மாணவர்கள் அசத்தியுள்ளனர். பூக்கள் அறக்கட்டளையின் சார்பில் மரம் வளர்ப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒட்டர்பாளையம் நடுநிலைப்பள்ளியில், குமிழ், இலுப்பை, மருதம் உள்ளிட்ட விதைகள் 500. மற்றும் கவர் 500. 134 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி வீட்டில் வளர்த்து வரும்படி தெரிவித்திருந்தோம். அப்பானியை மிகவும் சிறப்பாக செய்தனர் , அந்த மாணவர்கள் வளர்த்த நாற்றுக்களை பெருமகிழ்வுடன்பெற்றுக் கொண்டோம் நாற்று வளர்ப்பில் ஈடுபட்ட மாணவர்களுக்கு, செயல் வீர சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அந்த நாற்றுக்களை, ஊராட்சி அலுவலகம் மற்றும் ஆர்வமுள்ள பெற்றோரிடம் இலவசமாக வழங்கினர். மாணவர்கள் தங்கள் வீடு மற்றும் அருகிலுள்ள பகுதியில் மரம் வளர்ப்பில் ஈடுபட அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.











கருத்துகள்