வரலாற்றில் மரங்கள் மற்றும் பறவைகள்



     இந்தியப்பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள ஒரு தீவு மொரீசியஸ்.மனிதர்களின்கால்படாதவரைஅத்தீவுஅமைதியாகதன்இயல்பாகஇருந்தது.1505 ஆம் ஆண்டு நாடு களை வேட்டையாடும் காலனியாதிக்க வெறியோடு போர்த்துக்கீசியர்ள் மொரீசியஸ் தீவுகளுக்குள் நுழைந்தார்கள் .அதன்பின்னர் டச்சுக்காரர்கள் அங்கு குடியேறினார்கள் . 1973 ஆம் ஆண்டில் ஆய்வுக்கு சென்ற வல்லுநர்கள் குழுவால்  ‘கல்வேரிய மேசர் ’(Sideroxylongrandiflorum) என்றழைக்கப்படும் மர இனம் அங்கு அழிந்து வருவதாககண்டறியப்பட்டது. ஏறக்குறைய 13 கல்வேரிய மேசர் மரங்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாகவும்,  அதன் இளங்கன்றுகள் ஏதும் புதூதாக முளைக் கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.  எஞ்சிய அப்பதி மூன்று மரங்களும் ஏறக்குறைய 300  வயதை கடந்த பழமையான மரங்களாக இருந்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது . இன்னோரு சிறப்பு என்னவென்றால் உலகில் வேறு எங்கு மில்லாத கல்வேரிய மேசர் மரம் மொரீசியஸ் தீவில்மட்டுமே வளரக்கூடிய தாவரமாகும்.எஞ்சியிருக்கும் 13 மரங்களும் அழிந்துவிட்டால், கல்வேரிய மேசர் என்ற ஒரு இனமே இப்பூவுலகில் இருந்து அழிந்துவிட்டது என்று அர்த்தம் .வல்லுநர்கள் குழு அதன் விதைகளை சேகரித்து கல்வேரிய மேசர் மரத்தை மீண்டும் முளைக்கவைக்க எடுக்கப்பட்ட பல்வேறு பரிசோதனை நடவடக்கைகள் அனைத்தும் தோல்வியடைந்தது. அப்போது தான் வரலாறு அவர்களுக்கு  ‘டோடோ’ என்றொரு பறவையை அறிமுகம் செய்துவைக்கிறது  இப்பறவை வான்கோழியைவிட சற்றுப்பெரியது. ஒரு தடவைக்கு ஒருமுட்டையை இடும் தரையில் புற்களால் கூடு அமைத்து தன் முட்டையை அடைகாக்கும்.  மனிதர்களற்ற அல்லது தன்னை கொன்றுண்ணும் உயிரினங்களற்ற மொரீசியஸ்தீவில் அவை தன்னியல்பாக வாழ்ந்துவந்தன.  அத்தீவில் மனிதர்கள் குடியேரியபிறகு,  நம்மை வேட்டையாடுவார்கள் என்ற உணர்வற்ற டோடோ பறவைகள், மனிதர்களைகண்டு பயந்தோடவில்லை.  இதனால் மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக்காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவையின் அழிவுக்கும் கல்வேரிய மேசர்மரத்தின் அழிவுக்கு என்னதொடர்பு என்று கேட்கிறீர்களா?  நம்மூர்விளாம்பழம் போல கடுமையான பழங்களையுடையது கல்வேரியமேசர்மரம்.   அதன் பழங்களை டோடோ பறவைகள் தின்று, செரித்து, எச்சமாக இடும்.  அப்படி டோடோ பறவைகள் எச்சமாக இடும் விதைகளே முளைத்து, துளிர்த்து, செடியாகி, மரமாகவளரும்.1681-க்குப் பிறகு டோடோ பறவையில் ஒன்று கூட உயிருடன் இல்லை. அழிந்து போன பறவையாக டோடோ பறவையை அறிவித்துவிட்டார்கள்.  டோடோ பறவையின் எச்சம்வழியாக உயிர்ப்பிக்கும் கல்வேரியமேசர் இனம் இந்த உலகைவிட்டு நம் கண்முன்னே அழிவதை வேடிக்கை பார்க்கப் போகிறோம்.  ஒரு உயிரினத்தின் அழிவு என்பது அதனோடு இணைந்த இன்னொரு உயிரினத்தின் அழிவுக்கான தொடக்கமாகிறது.  இங்குள்ள ஒவ்வொரு உயிரினத் தோடும் மனித இனம் இயற்கையின் விதியால் இணைக்கப்பட்டுள்ளது. 

          பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே உள்ள மிகச்சிறிய தீவுதான் ஈஸ்டர்.  சில ஆண்டுகளுக்கு முன் இங்கு நடத்தப் பெற்ற பல்வேறு அகழ்வாய்வுகளில் பல்வேறு வகையான மரங்கள், செடிகள்,  பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் தொல்லெச்சங்களை கண்டெடுத்தனர். அதில் ஒன்றுதான் டோரோமிரோமரம். உலகில் வேறு எங்குமில்லுது ஈஸ்டர் தீவில் மட்டுமே வளரக்கூடியது டோரோமிரோ மரம்.  அதாவது டோரோமிரோமரம் ஈஸ்டர் தீவிற்குரிய மண்ணின் மரமாகும்.  








            ஒரு  கட்டத்தில் டோரோமி ரோமரங்கள் அனைத்தும் அழிந்துபோயின. இதனால் டோரோமிரோமரங்கள் தன்னை இனப்பெருக்கம் செய்துகொள்ளமுடியவில்லை. அம்மரங்களைசார்ந்து வாழ்ந்த பறவையினங்களும், வேறு சில உயிரினங்களும் அழியத்துவங்கின.  தாவரங்களின், பயிர்வகைகளின் இனப்பெருக்கத்திற்கு காரணமான பறவையினங்களும் பூச்சியினங்களும் அழியத்தொடங்கியதும்,  அதனால் அத்தீவிலிருந்த அனைத்து தாவரங்களும் முற்றிலுமாக அழிந்தன.   இதனால் ஏற்படுத்தப்பட்ட சூழல்கேடுகளால் வறட்சி, பஞ்சம், பசி, கலகம் என பல்வேறு காரணங்களால் அங்கிருந்த மனித இனம் தொடர்ந்து அழியத்தொடங்கியது.  தப்பிபிழைத்தவர்களில்,  தற்போது 200க்கும் குறைவான மக்களே அத்தீவில் வாழ்கின்றனர்.
  
       ஒரு மரவகையின் அழிப்பு ஒட்டு மொத்த மக்களையும் தடமின்றி துடைத்து எறிந்துவிட்டது.  வரலாற்றில் இவ்விருநிகழ்வுகளும் சூழலியல் பாதுகாப்பு குறித்த மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. 

       மேல் குறிப்பிட்டுள்ள இரு வரலாற்று நிகழ்வுகளையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். ஈஸ்டர் தீவைப் போல நாம் வாழுகிற உயிர்த் திணைமண்டலத்திலிருந்து நாமும் நமது பிள்ளைகளும் துடைத்து எறியப்படும் தருணம் எப்போது? டோடோ பறவை போல நம்மவூர் கானமயில் காணாமல் போய்விட்ட சேதி அறிவீர்களா? கல்வேரியமேசர்,  டோரோமிரோ போல அழிந்த அல்லது அழியப்போகும் நம்மவூர் மரங்கள் எவை? இதையெல்லாம் உணருவதற்கு நமக்கு நேரமிருக்கிறதா?

கருத்துகள்